யாரு சாமி அவன்.. ரூ.25,000 பட்ஜெட்.. 3D டிஸ்பிளே.. AF கேமரா.. 5000mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட ஓப்போ பிரியர்களுக்கு அந்த டிஸ்பிளே மட்டுமல்லாமல், லெதர் பேனல் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைன், 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், டைமன்சிட்டி 7050 சிப்செட், IP69, IP68 மற்றும் IP66 ரெசிஸ்டன்ட் கொண்ட ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro Plus) போன் பட்டையை கிளப்பும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியானதால் இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஆர்டர் செய்தால், ரூ.25,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதாவது, எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

எஸ்பிஐ, ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்களை இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போன் கொடுக்கிறது?
ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO F27 Pro Plus Specifications): இந்த ஓப்போவில் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்க முடியும். ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஆக்டோ கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (Octa Core 6nm MediaTek Dimensity 7050) சிப்செட் மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) பேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) யுஐ வருகிறது. வழக்கமான மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருவதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) மற்றும் டேமேஜ் ப்ரூப் 360 டிகிரி ஆர்மர் பாடி (Damage-Proof 360° Armour Body) கிடைக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) பேனல் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்பிளாஷ் டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 28 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கிடைக்கிறது. கேமராவில் பிரீமியம் சென்சார்கள் கொடுக்கப்படவில்லை. ஆகவே, 64 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் சென்சார் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஏஐ பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஏஐ அல்ட்ரா கிளியர் இமேஜிங் உள்ளது.
மேலும், ஏஐ எரைசர், ஏஐ மேட்டிங் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் 67W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவில் பெரிய பேட்டரி பக்கா பேக்கப் கொடுக்கும். பிரீமியமான லெதர் பேக் கொண்ட பேனலுடன் டஸ்க் பிங்க் (Dusk Pink), மிட்நைட் நேவி (Midnight Navy) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








