Home
Mobile

அள்ளி வீசுது அமேசான்.. 45W சார்ஜிங்.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஒப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 45W சார்ஜிங், சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ எப்27 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2299 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த அசத்தலான ஒப்போ போனை ரூ.20700 விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அள்ளி வீசுது அமேசான்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் இந்த புதிய ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ எப்27 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக ஏஐ ஸ்டுடியோ (AI Studio), ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பல அசத்தலான ஏஐ அம்சங்களுடன் ஒப்போ எப்27 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.

அள்ளி வீசுது அமேசான்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging)ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் சற்று குறைந்த விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on OPPO F27 5G With 108MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X