Home
Mobile

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.17000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

கேமரா பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 108 எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் சார்ஜிங், 16 ஜிபி ரேம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) போனானது, இதுவரையில் கிடைக்காத விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் வந்திருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனானது, அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது வெறும் ரூ.17,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக பிளிப்கார்ட்டில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.17000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications): இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் (Samsung) சென்சார் மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் உள்ளது. மல்டி ஆட்டோபோகஸ் (Multi Autofocus) வருகிறது.

மேலும், 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டூயல் வியூ வீடியோ, ஏஐ சீன் என்ஹான்ஸ்மென்ட், எச்டிஆர், நைட்ஸ்கேப், போர்ட்ராய்டு மோட் உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, ஒன்பிளஸ் நோர்ட் மாடல்களில் கம்மியான பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் கேமரா கொண்ட போனாக இந்த நோர்ட் சிஇ 3 லைட் இருக்கிறது.

போர்ட்ராய்டு மற்றும் நைட்ஸ்கேப் பீச்சர்கள் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்களிலும் இந்த ஒன்பிளஸ் மாடல் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.17000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்!

இந்த டிஸ்பிளேவில் 391 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் பி3 கலர் காமட் சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஆக்சிஜன்ஓஸ் 13.1 (OxygenOS 13.1) வருகிறது. இந்த ஒன்பிளஸ் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

67W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. பாஸ்டல் லைம் மற்றும் குரோமாடிக் கிரே கலர்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,989ஆக இருக்கிறது. இந்த விலையில் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ. 875 தள்ளுபடி வருகிறது. ஆகவே, ரூ.17,114 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on OnePlus Nord CE 3 Lite 5G With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X