பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.19,999 போதும்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் டிரான்ஸ்பரன்ட் மாடல்களுக்கு தனியிடம் பிடித்த நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக கம்மியான பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். டிசைன் மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களையும் இந்த நத்திங் போன் 2ஏ கொடுக்கிறது.
நத்திங் போன் 2ஏ பிளிப்கார்ட் விற்பனை (Nothing Phone 2a Flipkart Sale): இந்த நத்திங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2,000 விலை குறைந்து, ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.4,000 விலை குறைப்பில் கிடைப்பதால், நத்திங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த ரூ.19,999 பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இந்த நத்திங் போன் 2ஏ போன் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு டிரான்ஸ்பரன்ட் டிசைன் மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களும் வொர்த்தா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): இந்த நத்திங் போனில் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் விதமாக ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ (Octa Core 4nm MediaTek Dimensity 7200 Pro) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) மற்றும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
10 மாதங்களுக்கு முன்பு வெளியானதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்துள்ளது. டிஸ்பிளேவில் பிரீமியம் காட்டி இருக்கிறது, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (2412×1084 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனலை கொடுக்கிறது. புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்ட்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. இதுபோக 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. பிரீமியமான 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. ஏனென்றால், மெயின் கேமராவில் ஒஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) உள்ளது.
இந்த கேமராவில் 4K வீடியோ ஷூட் செய்து கொள்ளலாம். ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 2ஏ மாடலில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP54 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. டிரான்ஸ்பரன்ட் டிசைனிலும் 5000mAh பேட்டரி கொடுத்து இருக்கிறது.
ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் டிரான்ஸ்பரன்ட் பேக் பேனலில் ஆர்டர் செய்து கொள்ளலாம். டிசைனை பார்க்கையில், வழக்கம்போல எல்இடி லைட்களுடன் கிளைப் இன்டர்பேஸ் (Glyph Interface) கிடைக்கிறது. கேமரா, மியூசிக், நோட்டிபிகேஷன், ரிங்டோன்ஸ் போன்றவற்றின் போது மல்டிபிள் லைட் பேட்டர்ன்களை பேக் பேனலில் உங்களால் பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








