ஆளுக்கு 1 ஆர்டர்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த போன் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே, சோனி கேமரா, 68W வயர்டு சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த மோட்டோரோலா போனை ரூ.26499 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகமானது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போன் ஆனது 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
தரமான MIL-810H இராணுவ சான்றிதழ் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் அறிமுகமானது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த மோட்டோரோலா போனை வாங்க முடியும்.
கனெக்டிவிட்டி பொறுத்தவரை, 5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) போன்றவை இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications