நொடிக்கு நொடி ஆர்டர்.. ரூ.7998 பட்ஜெட்ல iPhone லெவல்.. AI கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே அதிரும்படி வெறும் ரூ.8000 பட்ஜெட்டுக்குள் 50எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 512ஜிபி மெமரி, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைனில் லாவா ஓ2 (Lava O2) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 Specifications): இந்த லாவாவில் ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்டிருக்கிறது. எச்டிஆர் மோட் (HDR Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்யூட்டி மோட் (Beauty Mode) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன.

1080p வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் உள்ளது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. கம்மி பட்ஜெட்டிலும் நல்ல கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்)பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரொசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 269 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), ஆக்டா கோர் யுனிசோக் டி616 (Octa Core UNISOC T616) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஆகவே, பட்ஜெட்டை காட்டிலும் கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த லாவா ஓ2 போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 121 நிமிடங்கள் பிடிக்கும். அதேபோல 500 மணி நேரங்களுக்கு ஸ்டான்பை பேக்கப் கொடுக்கும். மேலும், 468 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் எதிர்பார்க்கலாம்.
பேட்டரி சேவர் மோட் (Battery Saver Mode) வருகிறது. ஆகவே, பேட்டரி சிஸ்டம் பக்கா அவுட்புட் கொண்டதாகவே இருக்கிறது. இந்த லாவா ஓ2 மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. எஸ்டிகார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது. ஏஜி கிளாஸ் பேக் (AG Glass Back) பேனல் கொண்டிருக்கிறது. இம்பீரியல் கிரீன் (Imperial Green), மெஜஸ்டிக் பர்பிள் (Majestic Purple) மற்றும் ராயல் கோல்டு (Royal Gold) ஆகிய 3 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் கூப்பண் டிஸ்கவுண்ட் உடன் தொடங்கிவிட்டது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,498ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.7,998 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








