யாரு சாமி அவன்.. ரூ.10999 போதும்.. 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி அல்ட்ரா கிளியர் கேமரா, 16 ஜிபி ரேம், டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, டைனாமிக் பார், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், இலவச ஸ்மார்ட்வாட்ச் சலுகையோடு ஐடெல் எஸ்24 (itel S24) போன் விற்பனை செய்யப்படுகிறது.
வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் வருவதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை, விற்பனை விவரங்கள் மட்டுமல்லாமல், இலவசமாக கொடுக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களையும் இப்போது பார்ப்போம்.

ஐடெல் எஸ்24 அம்சங்கள் (itel S24 Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 எச்டிபிளஸ் (HD+) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பேட்டரி, கால் நோட்டிபிகேஷன்களுக்காக டைனாமிக் பார் (Dynamic bar) பீச்சர் கொண்டிருக்கிறது.
18W டைப்-சி குயிக் சார்ஜிங் (Type-C Quick Charge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு இன்பினிக்ஸ் போன்களில் வருவதை போலவே பைபாஸ் சார்ஜிங் (ByPass Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹீட் போன்ற பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் இந்த போனில் இருக்காது.
இந்த மாடலில் 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 ஐசோசெல் சென்சார் (Samsung HM6 ISOCELL Sensor) பயன்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait) பீச்சர்கள் வருகின்றன.
இந்த ஐடெல் எஸ்24 போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஐடெல் ஓஎஸ் 13.5 (itel OS 13.5) வருகிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 12என்எம் (Octa-Core MediaTek Helio G91 12nm) சிப் வருகிறது. இதுவொரு 4ஜி சிப்செட் மாடலாகும்.
ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர்கள், சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொண்டிருக்கிறது. 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் டவுன் ஒயிட் ஸ்டார்ரி பிளாக் ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் இந்த மாடலின் விலை ரூ.10,999ஆக மட்டுமே இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனை ஆர்டர் செய்தால், ஐடெல் 42 (itel 42) இலவசமாக கிடைக்கிறது.

ஐடெல் 42 ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் (itel 42 Smartwatch Specifications): இந்த மாடலில் 1.38 இன்ச் எச்டி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் டிஸ்பிளே மாடலாகும். ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 12 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. டிடபுள்யுஎஸ் பேரிங் (TWS Pairing) வருகிறது.
மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes), IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகிறது. இந்த மாடலின் விலை ரூ.999ஆக இருக்கிறது. இப்போது, ஐடெல் எஸ்24 போனுடன் இலவசமாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications