ஆர்டர் மிரளுது.. ரூ.21,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஐக்யூ குவெஸ்ட் டேஸ் விற்பனையில் (iQOO Quest Days Sale) 3டி டிஸ்பிளே, சாம்சங் கேமரா, 66W சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட ஐக்யூ இசட்7 ப்ரோ போன் கம்மி விலையில் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ போனில் சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆரா லைட் (Aura Light) இடம்பெற்றுள்ளது.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது.
மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.
இந்த போனின் டிஸ்பிளே மிட்-பிரீமியமாக இருக்கிறது. 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) பேனல் மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

அதோடு எச்டிஆர்10+ (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் (Touch Sampling Rate) வருகிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனில் 4600mAh பேட்டரி வருகிறது. அதோடு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா ஸ்லிம் டிசைன் (Ultra Slim Design) கொண்டுள்ளது.
ஆகவே, 7.36 மிமீ தடிமன் மற்றும் 175 கிராம் எடை மட்டுமே வருகிறது. இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வருகிறது.
இந்த ஐக்யூ போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் மற்றும் ப்ளூ லகூன் (Blue Lagoon) மற்றும் கிராஃபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது.
இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் அமேசான் தளத்தில் நடக்கும் ஐக்யூ குவெஸ்ட் டேஸ் விற்பனையில் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். அதோடு ரூ.21,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை வெறும் ரூ.21,999க்கு வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் பிரீமியம் 3டி டிஸ்பிளே வேண்டுமானால், இதை தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








