Home
Mobile

போட்டு தாக்கும் Flipkart Republic Day Sale.. ஆப்பிள் iPhone 15, iPhone 14, iPhone 13 மீது அடேங்கப்பா ஆஃபர்!

2024 ஆம் ஆண்டிற்கான பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையானது (Flipkart Republic Day Sale) மொத்தம் ஆறு நாட்கள் நடக்கவுள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி முதலும், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி முதலும் தொடங்கும்.

ஜனவரி 19 ஆம் தேதி வரை நடக்க உள்ள பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையில் உங்களுடைய முழு கவனமும் ஆப்பிள் ஐபோன்கள் மீது மட்டுமே உள்ளதென்றால், இதுவே அதற்கான சரியான நேரம். ஏனென்றால் ஆப்பிள் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 13 (iPhone 13) மீது "அடேங்கப்பா" என்று கூறுமளவிற்கு அபார தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Republic Day Sale: iPhone 15, iPhone 14, iPhone 13 ஆஃபர்!

ஐபோன் 15 மீதான ஆஃபர்: கடந்த செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.79,900 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் இதன் மீது 8% தள்ளுபடியை அறிவித்துள்ளது. தற்போது இது ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது தவிர பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.57,990 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட டிவைஸ்களில் கூடுதலாக ரூ.3000 டிஸ்கவுண்ட்டையும் வழங்குகிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இஎம்ஐ மற்றும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனை தள்ளுபடிகளும் கிடைக்கும். எச்டிஎப்சி டெபிட் கார்டு பயனர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.4,000 தள்ளுபடி பெறலாம்.

Flipkart Republic Day Sale: iPhone 15, iPhone 14, iPhone 13 ஆஃபர்!

ஐபோன் 14 மீதான ஆஃபர்: கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,900 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் இதன் மீது 15% தள்ளுபடியை அறிவித்துள்ளது. தற்போது இது ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது தவிர பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.54,990 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) மற்றும் யெஸ் பேங்க் (Yes Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ஏராளமான வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும்.

Flipkart Republic Day Sale: iPhone 15, iPhone 14, iPhone 13 ஆஃபர்!

ஐபோன் 13 மீதான ஆஃபர்: ஆப்பிள் ஐபோன் 13 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.59,900 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட்டில் தற்போது இது ரூ.52,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.44,400 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும், எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கான தள்ளுபடியும் கிடைக்கும்.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் போது, ஆப்பிள் ஐபோன்களை தவிர்த்து கூகுள், சாம்சங், மோட்டோரோலா, விவோ, ஒப்போ, போக்கோ, ரியல்மி, ரெட்மி உள்ளிட்ட பிராண்டுகளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மீதும் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்.

வேறு என்னென்ன போன்கள் மீது ஆஃபர் கிடைக்கும்? கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7a), பிக்சல் 8 (Google Pixel 8), சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE 5G), மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo), சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

கூடவே விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro), ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 10 Pro), விவோ டி2எக்ஸ் (Vivo T2x), போக்கோ எக்ஸ்5 (Poco X5), ரியல்மி 11 (Realme 11), ரெட்மி 12 (Redmi 12), சாம்சங் கேலக்ஸி எப்34 (Samsung Galaxy F34) போன்ற ஸ்மார்ட்போன்களும் கூட மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 percent discount on iPhone 14 in Flipkart Republic Day Sale Offers on iPhone 15 iPhone 13 too
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X