எல்ஜியின் பட்ஜெட் விலை போன் ஏ-230- சிறப்பம்சங்கள்

அந்த வகையில் மார்க்கெட்டில் முக்கிய இடம் வகிக்கும் எல்ஜி நிறுவனமும், குறைந்த விலையில் டியூவல் சிம் வசதிகொண்ட போன்களை அடு்த்தடுத்து அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அதில், சமீபத்தி்ல் அந்த நிறுவனம் அறிமுகம் செய்து, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எல்ஜி ஏ-230 டியூவல் சிம் போனின் சிறப்பம்சங்களை காணலாம்.
கேண்டி பார் தோற்றம் கொண்டதாக எல்ஜி ஏ-230 வடிவமைக்கப்பட்டுள்ளது. சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் எளிதாக வைத்து எடு்ப்பதற்கு வசியான வடிவமைப்பையும், எடையையும் கொண்டுள்ளது.
டிஸ்பிளே அழகாக இருக்கிறது. எளிதாக அப்ளிகேஷன்களை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடியோ ரெக்கார்டிங் வசதிகொண்ட 1.3 மெகாபிக்செல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்தவரையில் மியூசிக் பிளேயர் மற்றும் ஆடியோ பிளேயர் வசதிகள் இதில் உண்டு.
இது பேஸிக் போன் மாடல் என்பதால், ஜிபிஎஸ், வை-பை மற்றும் 3ஜி இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லை. ஆனால், புளூடூத் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி உள்ளது. இது பேஸிக் எச்டிஎம்எல் பிரவுசர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வீடியோ கேம்களும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.
நல்ல இன்டர்நெல் மெமரி கொண்டுள்ள இந்த போனில், சேமிப்பு திறனை அதிகப்படுத்த கூடுதல் மெமரி கார்டையும் பொறுத்திக்கொள்ள முடியும். தவிர, 6 மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரியும் ஏ-230 மதிப்பை கூட்டுகிறது.
ஏ-230 குறிப்பிட்டத்தக்க அம்சங்கள்:
டியூவல் சிம் வசதி
புளூடூத்
8ஜிபி வரை சேமிப்பு திறன்
ஜாவா சாப்ட்வேர்
மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர்
1.3 மெகா பிக்செல் கேமரா
அடிப்படை அம்சங்கள் மற்றும் டியூவல் சிம் வசதி கொண்ட இந்த போன் இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ள இந்த போன் ரூ.4,000 விலையி்ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications