முதல் டச் ஸ்கிரீன் போனை விரைவில் களமிறக்குகிறது லெமன்

ஐடி-414 என்ற குறியீட்டுடன் வரும் இந்த போனை வெகு நேர்த்தியாக அழகுற வடிவடிமைத்துள்ளது லெமன் மொபைல்ஸ்.
2.8 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஎப்டி டிஸ்பிளே கொண்ட இந்த போன் இயக்குவதற்கு அதிக வசதியாக இருக்கிறது.
1.3 மெகாபிக்செல் கேமரா கொண்ட இந்த போன் 1280*1024 பிக்செல் ரெசொலியூஷனை கொடுக்கிறது.
இது டிஜிட்டல் ஜும், வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட ஸ்டாண்டர்டு அம்சங்களை கொண்டுள்ளது.
வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்களை இணைக்க 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் வசதியும் இருக்கிறது.
எப்எம் ரேடியோ, யூஎஸ்பி போர்ட் சிங்க் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.
ஜிபிஆர்எஸ், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் லெமன் ஐடி-414 கொண்டுள்ளது.
லெமன் ஐடி-414 சிறப்பம்சங்கள்:
இன்பில்ட் வீடியோ கேம்ஸ்
புளூடூத்
மொபைல்டிராக்கர்
ஆட்டோ கால் ரெக்கார்டு
எப்எம் ரெக்கார்டிங்
எம்எம்எஸ் அனுப்பும் வசதி
குறைந்த விலை பட்ஜெட் போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் இந்த போனை லெமன் டச் ஸ்கிரீன் வசதியுடன் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் கட்டியம் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications