Home
Mobile

விரட்டி விரட்டி ஆர்டர்.. ரூ.7,999 பட்ஜெட்ல AI கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதுக்குமேல கம்மி கிடைக்காது என்றே அடித்து சொல்லும் அளவுக்கு 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) போனின் விற்பனையானது, அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கிவிட்டது.

டெக்னோ ஸ்பார்க் 20சி விலை (Tecno Spark 20C Price): இந்த டெக்னோவில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ரூ.7,999 பட்ஜெட்ல AI கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்!

இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் டெக்னோ ஸ்பார்க் 20சி போனை வாங்கி கொள்ளலாம். இப்போது, இந்த போனின் முழு அம்சங்களையும் தெரிந்து கொள்வோம்.

டெக்னோ ஸ்பார்க் 20சி அம்சங்கள் (Tecno Spark 20C Specifications): ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 (Octa Core MediaTek Helio G36) சிப்செட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஹைஓஎஸ் (HiOS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். 90Hz ரெஃரெஷ் ரேட் கொண்டுள்ளது. சார்ஜிங், பேஸ் அன்லாக் மற்றும் காலிங் அனிமேஷன்களுக்கான டைனாமிக் போர்ட் (Dynamic Port) என்னும் பிரத்யேக பீச்சர் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது.

இந்த டெக்னோவில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி (Type-C) போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி உடன் 8.55 மிமீ தடிமன் மற்றும் 189 கிராம் எடை வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ராபிட் பேஸ் அன்லாக் (Rapid Face Unlock), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது.

இந்த டெக்னோவில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ஜிபிஎஸ் (GPS), வை-பை (WiFi), எப்எம் (FM) மற்றும் ஓடிஜி (OTG) ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. கிராவிட்டி பிளாக் (Gravity Black), மிஸ்டரி ஒயிட் (Mystery White) மற்றும் மேஜிக் ஸ்கின் கிரீன் (Magic Skin Green) ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Tecno Spark 20C 16GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X