Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.13000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) சாம்சங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படி பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போன் இப்போது கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டிலும் 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களின் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த சாம்சங் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-வி சூப்பர் அமோலெட் (Infinity-V Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்! ரூ.13000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

அதேபோல இந்த போனில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன்யுஐ 6 (OneUI 6) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. மீடியம் அவுட்புட் கொண்ட ஆர்ம் மாலிஜி 57 எம்பி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்டிருக்கிறது. ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் கூடவே வருகிறது. இந்த கம்மியான பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. அதேபோல சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனில் 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. கேமராவை போலவே பட்ஜெட்டில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது.

இந்த பேட்டரியுடன் 217 கிராம் எடை வருகிறது. அதேபோல 9.4 மிமீ தடிமன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. இதுவொரு 5ஜி மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/எஸ்என்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499ஆகவும் இருக்கிறது. இப்போது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.7550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 1 டிபி மெமரி சப்போர்ட் கொண்ட இந்த போனை ரூ.13,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆஷ் பிளாக் (Ash Black) , ஜாஸி கிரீன் (Jazzy Green) மற்றும் க்ரூவி வயலெட் (Groovy Violet) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா சாம்சங் மாடலுக்கு இது நல்ல ஆப்ஷன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Samsung Galaxy F15 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X