Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. IP67 ரேட்டிங்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஐபி67 ரேட்டிங், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை ரூ.28999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் ( Samsung Galaxy A36 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display) உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்தது. மேலும் எச்டிஆர் ஆதரவு, 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+)உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3(Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாம்சங் போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் போனில் உள்ளன.

ஒன் யுஐ 7 (OneUI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் ஆகும்.

5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என்பஎப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Samsung Galaxy A36 5G in amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X