Home
Mobile

அசூர டிஸ்கவுண்ட்.. ரூ.25,000 பட்ஜெட்ல மிரளும் சாம்சங் மாடல்.. 1TB மெமரி.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக சாம்சங் கேலக்ஸி ஏ34 (Samsung Galaxy A34) போனுக்கு அதிரிபுதிரி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ34 அம்சங்கள் (Samsung Galaxy A34 Specifications): இந்த சாம்சங் ஏ சீரிஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் வருகிறது.

வெறும் ரூ.25000 போதும்.. மிரளும் சாம்சங் மாடல்.. 8GB ரேம்.. 1TB மெமரி!

அதோடு சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) ஓஎஸ் மற்றும் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் மாடலில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. அதே போல 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் (1080×2340 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) ஸ்கிரீன் வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-யு (Super AMOLED Infinity-U) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் நானோ சிம் கார்டு மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த சாம்சங் போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போன் 199 கிராம் எடைக் கொண்டிருக்கிறது. இதன் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்ஃஎப்சி போன்ற (NFC) வருகின்றன. அதோடு 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த சாம்சங் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) கொண்டிருக்கிறது. இந்த போன் பிளாக், லைட் கிரீன், லைட் வயலெட் மற்றும் சில்வர் ஆகிய ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் 2 வேரியண்ட்களுக்கும் ரூ.2,250 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.25,749க்கு வாங்கிக் கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Samsung Galaxy A34 in Amazon Great Indian Festival Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X