Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் ரெட்மி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 13 5ஜி மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி 6080 சிப்செட், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்தது. இப்போது ரெட்மி நோட் 13 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி ஸமார்ட்போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1349 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLEDடிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 108எம்பி கேமரா.. ஆஃபரில் ரெட்மி போன்..

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 108எம்பி கேமரா.. ஆஃபரில் ரெட்மி போன்..

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். சாண்ட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் டைம் ப்ளூ ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது இந்த போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு இந்த போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Redmi Note 13 5G in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X