Home
Mobile

தட்டித்தூக்குது ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் மட்டுமல்லாமல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம், அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி பி1 ஸ்பீடு (Realme P1 Speed) பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.15000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி1 ஸ்பீடு மாடலுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட், பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி பி1 ஸ்பீடு அம்சங்கள் (Realme P1 Speed Specifications): இந்த ரியல்மியில் கேமிங் பிரியர்களுக்கு மிரட்டலான அவுட்புட் கொடுக்கும் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (4nm Octa Core MediaTek Dimensity 7300- Energy) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் (Stainless Steel Vapor Cooling) சிஸ்டம் வருகிறது.

தட்டித்தூக்குது ஆர்டர்! ரூ.15000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5 (Realme UI 5) மற்றும் கூடுதல் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. பாண்டா கிளாஸ் புரொடெக்சன் உள்ளது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மியில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பெறலாம். பாண்டா கிளாக் போக ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி இருக்கிறது.

8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 14 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. ஆகவே, 26 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி பி1 ஸ்பீடு போனின் கேமராவில் வழக்கமான 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

ஏஐ பூஸ்ட் 2.0 (AI Boost 2.0), கேம் போகஸ் மோட் (Game Focus Mode), வாய்ஸ் சேஞ்சர் (Voice Changer) மற்றும் ஜிடி மோட் (GT Mode) போன்ற ஸ்மார்ட் டெக்னாலஜி மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ரியல்மி பி1 ஸ்பீடு போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.

7.6 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடியிலும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி1 ஸ்பீடு மாடலில் IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.17999 பட்ஜெட்டில் வந்தது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பழைய மொபைலுக்கு ஏற்ப ரூ.9600 வரையில் எக்ஸ்சேஞ்ச் போன்ஸ் கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் கேமிங் போனுக்கு பக்கா ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Realme P1 Speed 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X