யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,999 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி அல்ட்ரா கிளியர் கேமரா, 3X இன்-சென்சார் ஜூமிங், மினி கேப்சூல் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஆக்டா கோர் சிப்செட் போன்ற நம்ப முடியாத பீச்சர்கள் மட்டுமல்லாமல், 7.99 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கும் ரியல்மி சி53 (Realme C53) போனுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.8,999 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா மாடல் கிடைப்பதால் விற்பனை பின்னியெடுக்கிறது.
இந்திய கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி கம்மியான பட்ஜெட்டில் பக்கா கேமரா பீச்சர்கள் கொண்ட மாடல்களை ரியல்மி நிறுவனம் தொடர்ந்து களமிறக்கி வருகிறது. இந்த பட்ஜெட் மாடல்களில் நம்ப முடியாத விலையில் ரியல்மி சி53 போனானது வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 108எம்பி கேமராவை கொடுத்தது.

108 எம்பி கேமரா மட்டும்தான என்று நினைத்தால், அதில் 3X இன்-சென்சார் ஜூமிங், சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர், சீக்ரெட் கார்டன் ஃபில்டர், நைட்போட்டோகிராபி மோட் போன்ற பீச்சர்களை கொடுத்து மிரளவிட்டுள்ளது. இப்படிப்பட்ட போன் இப்போது பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் ரூ.10000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. முதலில் பீச்சர்களை பார்த்து விடுவோம்.
ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த சி53 மாடலில் 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இதுவொரு 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்ட கொண்ட ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும்.
6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Card Slot) வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ரியல்மி யுஐ டி எடிஷன் (realme UI T Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa-Core UNISOC T612 12nm) சிப் வருகிறது.

இந்த பட்ஜெட்டிலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. கேமராவை பார்க்கையில் 108 எம்பி மெயின் கேமரா + டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. மெயின் கேமராவில் 3X இன்-சென்சார் ஜூம் (In-sensor Zoom) சப்போர்ட் வருகிறது. பொக்கெ எஃபெக்ட் கன்ட்ரோல் (Bokeh Effect Control) பீச்சர் வருகிறது.
மேலும், சிட்டி ஸ்ட்ரீட் ஃபில்டர் (City Street Filter), சீக்ரெட் கார்டன் ஃபில்டர் (Secret Garden Filter), நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) பீச்சர்களும் வருகின்றன. 1080P வீடியோ ஷூட் செய்துகொள்ளலாம். 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, பட்ஜெட்டில் கேமரா பிரியர்களுக்கு பக்கா ஆப்ஷாக இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 7.99 மிமீ தடிமன், 186 கிராம் எடை உள்ளது. சாம்பியன் கோல்டு மற்றும் சாம்பியன் பிளாக் கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3000 டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. மல்டிபிள் பேங்க் கார்டுகளை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








