பிளிப்கார்ட் காலி.. வெறும் ரூ.16,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
நம்ப முடியாத கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) கிடைக்கிறது. இப்போது, பேங்க் டிஸ்கவுண்ட் போக மேலும் கம்மியான விலைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி போனின் பீச்சர்களை பார்த்துவிட்டு, வாங்கலாமா அல்லது வேண்டமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
ரியல்மி 14டி 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Realme 14T 5G Flipkart Sale): இந்த 14டி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யும்பட்சத்தில் ரூ.1000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் கிரெடிட் கார்டுகள் மட்டுமல்லாமல், டெபிட் கார்டுகளுக்கும் கிடைக்கிறது. அதுவே ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.
மேலும், உங்களிடம் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.1,850 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ஆஃபர்களுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி 14டி 5ஜி போனில் சர்ப் கிரீன் (Surf Green), அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் லைட்னிங் பர்பிள் (Lightning Purple) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. பீச்சர்களை பார்ப்போம்.
ரியல்மி 14டி 5ஜி அம்சங்கள் (Realme 14T 5G Specifications): இது பட்ஜெட் மாடலாக இருந்தாலும் பர்ஃபாமென்ஸ் பக்காவாக எதிர்பார்க்கும்படி 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் அதற்கு ஏற்ப மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.
10 ஜிபிக்கா டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. ஆகவே, 18 ஜிபி ரேம் கொண்ட மாடலாக அவுட்புட் கொடுக்க இருக்கிறது. 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 180Hz டச் சாம்பிளிங் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. இந்த ரியல்மி 14டி 5ஜி போனில் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சார் மற்றும் எல்க்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) சப்போர்ட் கொண்ட 5 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மோனோகுரோம் (Monochrome) கேமரா சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த கேமராவில் கேலக்ஸிகோர் சென்சார் கிடைக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ ஷூட்டரில் எதிர்பார்க்காதபடி சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் கிடைக்கிறது. இந்த ரியல்மி 14டி 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டைப்-சி ஆடியோ உள்ளது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








