Home
Mobile

மிரளுது மார்கெட்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 64W சார்ஜிங்.. 15GB ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஓஎல்இடி டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, 67W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட போக்கோ எப்5 (POCO F5) போனானது, இதுவரையில் கிடைக்காத தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போக்கோ எப்5 அம்சங்கள் (POCO F5 Specifications): இந்த போக்கோவில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 64W சார்ஜிங்.. 15GB ரேம்.. எந்த மாடல்?

அதுமட்டுமல்லாமல், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போக்கோ எப்5 போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 725 ஜிபியு (Adreno 725 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போக்கோ எப்5 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 7 ஜிபிக்கான டர்போ ரேம் (Turbo RAM) ரேம் சாப்போர்ட் வருகிறது. இந்த போனில் ஏஐ டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (AI Triple Camera System) வருகிறது.

ஆகவே, 64 எம்பி (OIS) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), மூவி ஃப்ரேம் (Movie Frame), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter) போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.

OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 64W சார்ஜிங்.. 15GB ரேம்.. எந்த மாடல்?

அதேபோல அல்ட்ரா வைடு வீடியோ (Ultrawide Video) மற்றும் லாங் எக்ஸ்போசர் (Long Exposure) போன்ற வீடியோ ரெக்கார்டிங் பீச்சர்களும் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் விலாக் மோட் (VLOG Mode), பால்ம் ஷட்டர் (Palm Shutter), ஷார்ட் வீடியோ (Short Video), டைம் பர்ஸ்ட் (Timed Burst) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன.

இந்த போக்கோ எப்5 போனில் 67W டர்போ சார்ஜர் (Turbo Charger) சப்போர்ட் வருகிறது. 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த டர்போ சார்ஜிங் மூலம் 12 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. பேட்டரியோடு 181 கிராம் எடை மற்றும் 7.9 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.

IP53 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) வருகிறது.

இந்த போன் கார்பன் பிளாக், சாண்ட்ஸ்டோர்ம் ஒயிட் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.4,350 தள்ளுபடியோடு ரூ.25,649க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரிடெட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on POCO F5 5G With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X