Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.16000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 2TB மெமரி.. 5100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களே நம்ப முடியாத பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டபுள் டெம்பர்ட் கிளாஸ் புரொடெக்சன் கொண்ட 120Hz டிஸ்பிளே, 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5100mAh பேட்டரி, ஏஐ சப்போர்ட் கொண்ட 50 எம்பி கேமரா சிஸ்டம், 16 ஜிபி ரேம் மற்றும் 2 டிபிக்கான மெமரி சப்போர்ட் கொண்ட ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஓப்போவின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A3 Pro 5G Specifications): இந்த ஓப்போவில் 6.67 இன்ச் (1604 × 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. ப்ளூ கிளாஸ் டபுள் டெம்பர்ட் கிளாஸ் (Blue Glass Double Tempered Glass) புரொடெக்சன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

செய்கைனா இதுதான்! ரூ.16000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த போன்?

மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஓப்போவின் லேட்டஸ்ட் கலர்ஓஸ் 14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மிட்-பட்ஜெட் போன்களில் வரும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி-ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.

இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் மற்றும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது.

ஏஐ சப்போர்ட கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) உள்ளிட்ட பீச்சர்கள் வருகின்றன. இந்த ஓப்போவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.

செய்கைனா இதுதான்! ரூ.16000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த போன்?

3.5 ஆடியோ ஜாக் மற்றும் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் உள்ளது.

மேலும், இந்த ஓப்போவில் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் வருகிறது. டூயல் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி மாடலில் மூன்லைட் பர்பிள் (Moonlight Purple) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) கலர்கள் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1200 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,799 பட்ஜெட்டில் வாங்கலாம். எச்டிஎப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on OPPO A3 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X