ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5100எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 45 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1200 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒப்போ போனை ரூ.16799 விலையில் வாங்க முடியும்.

ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள்(OPPO A3 Pro 5G specifications): 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ப்ளூ கிளாஸ் டபுள் டெம்பர்டு கிளாஸ் (Blue Glass double tempered glass) உள்ளிட்ட உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 630 6எம்எம் (octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கலர்ஒஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14)இயங்குதள வசதி உடன் ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அமைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.5எம்ம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
5100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W SuperVOOC fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் மூன்லைட் பர்பிள் (Moonlight Purple) மற்றும் ஸ்டாரி பிளாக் (Starry Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








