Home
Mobile

ஒன்பிளஸ் 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் போன் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஒரு அசத்தலான ஒன்பிளஸ் 5ஜி போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது ஒன்பிளஸ் நோல்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) போனுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் தளத்தில் இந்த போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்..

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இந்த போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன் 50 எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், 10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்

5500mAh பேட்டரி வசதி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு (Ultra Orange) நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போன் வாங்க கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனில் உள்ளன. தரமான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on OnePlus Nord CE4 Lite 5G with 8GB Ram in Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X