செய்கைனா இதுதான்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுடன் மிட்-ரேஞ்ச் பீச்சர்களையும் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவான விலையில் மோட்டோரோலா ஜி85 (Motorola G85 5G) கிடைக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) உடனடி டிஸ்கவுண்ட் போக மேலும் கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த மோட்டோ போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் பின்வரும் பீச்சர்களை பார்த்துவிட்டு, முடிவெடுக்கலாம்.
இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைனிலும் டெக்னாலஜிகல் நானோ லெதர் (Technological Nano Leather) கொடுக்கிறது. கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) டிஸ்பிளே உள்ளது.

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G Specifications): இந்த மோட்டோ போனில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் எஸ்ஓசி (6nm Qualcomm Snapdragon 6s Gen 3 SoC) சிப்செட் மற்றும் மை யுஎக்ஸ் (My UX) யுஐ கிடைக்கிறது. முன்பே பார்த்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது.
வேரியண்ட்களை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் மெமரி கொண்டிருக்கிறது. பிஓஎல்இடி (pOLED) பேனல் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருகிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 140Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
இதுபோக 360Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு இது பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும். மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 395 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஒய்டி 600 (Sony Lytia 600) சென்சார் மற்றும் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கொண்டிருக்கிறது. இதே கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization Technology) மற்றும் பிடிஏஎப் (PDAF) போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
இந்த மோட்டோவில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட (Stereo Speakers) பேக் செய்யப்பட்டுள்ளன. வைவா மெஜந்தா (Viva Magenta), ஆலிவ் கிரீன் (Olive Green), கோபால்டு ப்ளூ (Cobalt Blue) அல்லது அர்பன் கிரே (Urban Grey) ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 30W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனை வெறும் ரூ.16,999-க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








