Home
Mobile

இதுதான் பெஸ்ட் ஆஃபர்.. சோனி கேமரா.. pOLED டிஸ்பிளே.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 50எம்பி கேமரா, 33 ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிபசெட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. இப்போது மோட்டோரோலா ஜி85 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி85 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே இப்போது ரூ.16,999 இருந்தால் போதும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிவிடலாம்.

இதுதான் பெஸ்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்

மோட்டோரோலா ஜி85 5ஜி அம்சங்கள் (Motorola G85 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED)டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz refresh rate), 1600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits peak brightness)மற்றும் சிறந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் உடன் மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்துள்ளது.மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இதுதான் பெஸ்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYT-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio,), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

இதுதான் பெஸ்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஜிபிஎஸ் (GPS), சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W டர்போ சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Motorola G85 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X