Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் பிஓஎல்இடி டிஸ்பிளே, 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட், 33W டர்போ சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) உடனடி டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது, வெறும் ரூ.16000 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் என்ன?

இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.8000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 பட்ஜெட்டில் சோனி கேமரா கொண்ட இந்த மோட்டோ ஜி85 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே!

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G Specifications): இந்த பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே மற்றும் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony Lytia 600) சென்சார், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் குவாட் பிடிஏஎப் (Quad PDAF) ஆல் பிக்சல் போகஸ் சப்போர்ட் வருகிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ விஷன் (Macro Vision) சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

ஆகவே, கேமராவில் பட்ஜெட்டை விட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்பிளே (pOLED Endless Edge Display) வருகிறது. இந்த டில்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 140Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 395 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் பஞ்ச்-ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும். இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு, மை யுஎக்ஸ் (My UX) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.

பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card Slot) வருகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் IP52 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. 33W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 172 கிராம் எடை மற்றும் 7.59 மிமீ தடிமன் வருகிறது. கோபால்ட் ப்ளூ, ஆலிவ் கிரீன், அர்பன் கிரே கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Moto G85 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X