பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.5699 பட்ஜெட்ல 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படி வெறும் ரூ.5000 பட்ஜெட்டில் டைனாமிக் பார் பீச்சர் கொண்ட எச்டிபிளஸ் டிஸ்பிளே, டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 2 டிபி மெமரிக்கான மைக்ரோ எஸ்டி சிலாட் போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் ஐடெல் ஏ70 (itel A70) கிடைக்கிறது. அமேசான் டிஸ்கவுண்ட்டில் மேலும் கம்மியான விலைக்கு கிடைக்கும் இந்த ஐடெல் போனின் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்கள் இதோ.
இந்த ஐடெல் போனின் டிசைனில் பட்ஜெட்டைவிட பிரீமியம் லுக் கொடுக்கிறது. டைனாமிக் பார், அதிகப்படியான விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன், ஸ்மார்ட்லிங்க் பிளஸ் டெக்னாலஜி (Smart Link+ Technology) போன்ற எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன?

ஐடெல் ஏ70 அம்சங்கள் (itel A70 Specifications): இந்த ஐடெல்லில் மெமரி ப்யூஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் வருகிறது. 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதுபோக 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 2 நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) உள்ளது.
டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் மற்றும் பஞ்ச் ஹோல் டிசைன் கொண்ட 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டைனாமிக் பார் பீச்சர் மூலம் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம்.
இது பட்ஜெட்டில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும். 8.6 மிமீ ஸ்லிம் பாடியில் பிரீமியம் லுக்கில் பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold), அசுர் ப்ளூ (Azure Blue), ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black) மற்றும் பீல்டு கிரீன் (Field Green) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஏஐ லென்ஸ் கொண்ட 13 எம்பி எச்டிஆர் (HDR) கேமரா வருகிறது.
இந்த ஐடெல் வேரியண்ட்டில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ஷூட்டரில் பேஸ் அன்லாக் (Face Unlock) கிடைக்கிறது. வழக்கமான சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Side Fingerprint Sensor) வந்துள்ளது. அடிமட்ட பட்ஜெட்டில் வருவதால் ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், டைப் சி போர்ட் உடன் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
ஐடெல் ஓஎஸ் 13 (itel OS 13) பேஸ்டு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கோ எடிஷன் (Android 13 OS Go Edition) மற்றும் பட்ஜெட் அவுட்புட் கொண்ட மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ரூ.8000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் போன்களில் வரும் ஆக்டா கோர் யுனிசோன் டி603 12என்எம் (Octa Core Unisoc T603 12nm) சிப்செட் உள்ளது.
இந்த ஐடெல்லின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6299ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.629 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.5699 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ரூ.5950 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications