அமேசான் மிரளுது.. ரூ.29999 போதும்.. 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 8GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி, சோனி சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் வெளியான ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த போனுக்கு கிடைக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 10 அமேசான் விற்பனை (iQOO Neo 10 Amazon Sale): இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.40,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.30,399 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை போக ஆர்டருக்கு கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட்டை பார்க்கையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. இதே கார்டுகள் மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும், ரூ.2,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.29,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஒயிட் ஷேட் கொண்ட இன்ஃபெர்னோ ரெட் (Inferno Red) கலரில் கிடைக்கிறது. இது வழக்கமான டூயன் டோன் லுக் கொடுக்கிறது. அடுத்து டைட்டானியம் குரோம் (Titanium Crome) லுக்கில் மற்றொரு கலர் வேரியண்ட் இருக்கிறது. பீச்சர்கள் எப்படி?
ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications): இந்த நியோ மாடலில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android OS 15) கிடைக்கிறது. லேட்டஸ்ட் கேமரா மற்றும் கேமிங் பீச்சர்களுடன் இன்-ஹவுஸ் ஃபன்டச் ஓஎஸ் 15 கிடைக்கிறது. கேமிங் அவுட்புட் கொடுக்க ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 8s Gen 4) சிப்செட் கிடைக்கிறது.
எஸ்ஜிஎஸ் பைவ்-ஸ்டார் சன்லைட் சர்டிபிகேஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது. மேலும், 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 4320 PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக அடாப்டிவ் கலர் டெம்ப்ரேச்சர் சென்சார் (Adaptive Color Temperature Sensor) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு வெட் ஃபிங்கர்ஸ் டச் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. அதேபோல மிலிட்டரி கிரேடு டிராப் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
3டி ஸ்டீரியோ சவுண்ட் அவுட்புட் கொண்ட டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speaker) வருகின்றன. இதில் கேமிங் கஸ்டமைடு சவுண்ட் எஃபெக்ட்ஸ் (Game Customized Sound Effects) கிடைக்கிறது. இதுபோக எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor), இன்பிராரெட் பிளாஸ்டர் (Infrared Blaster) மற்றும் அல்ட்ரா ரேஞ்ச் என்எப்சி (Ultra-Large NFC) கிடைக்கிறது.
இந்த ஐக்யூ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 32 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொண்ட 7000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 144 FPS கேமிங் அவுட்புட் மற்றும் கியூ1 கம்ப்யூட்டிங் சிப் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications