Home
Mobile

ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் புதிய போன் - எம்விஎல் அறிமுகப்படுத்துகிறது

By Super
ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் புதிய போன் - எம்விஎல் அறிமுகப்படுத்துகிறது
மின்னணு சாதன உற்பத்தியில் புகழ் பெற்ற எம்விஎல் நிறுவனம் புதிய எம்விஎல் ஆர்6 என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

எம்விஎல் ஆர்6 சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஒரு மலிவு விலை மொபைலாகும். குறிப்பாக இது ஸ்னிஃபர் அப்ளிகேஷன் வசதியைக் கொடுக்கிறது.

துல்லியமான சிறந்த படங்களை எடுக்கக்கூடிய ஃப்ளாஷ் வசதியுடன் வீடியோ ரிக்கார்டிங் செய்யக்கூடிய 1.3 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகிறது. இதில் நாம் சூம் செய்யலாம். மேலும் எம்பி3 மியூசிக் ப்ளேயர் மற்றும் வயர்லஸ் எஃப் எம் ரேடியோ மற்றும் ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.

எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத் தொடர்பையும் வழங்குகிறது. இதன்மூலம் நாம் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை விரைவாக பரிமாற்றம் செய்யமுடியும்.எம்விஎல் ஆர்6 இன்டர்நெட் வசதிக்கான ஜிபிஆர்எஸ் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் எந்த நேரத்திலும் நாம் இணையதளத்தில் வேலை செய்ய முடியும்.

மேலும் இது 8 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவு சேமிப்பு வசதியையும் அளிக்கிறது. இதன்மூலம் நமது தேவைக்கேற்ப வீடியோ மற்றும் ஆடியோ பாடல்களை, காட்சிகளை சேமிக்க முடியும்.

எம்விஎல் ஆர்6ன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் அதனுடைய பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். அதாவது இதன் பேட்டரி 650 நிமிடங்கள் வரை தொடர்ந்து பேசக்கூடிய பேக்கப்பையும் 720 மணி வரை ஸ்டான்டர்ட் பேக்கப்பையும் கொண்டுள்ளது. மேலும் பண கன்வெர்டர், உலக கடிகாரம், ஒலி ரிக்கார்டர் மற்றும் கால்குலேட்டரையும் வழங்குகிறது.

எல்லா வசதிகளையும் கொண்ட இந்த எம்விஎல் ஆர்6 அனைவரையும் கவரக்கூடிய கருப்பு வண்ணத்தில் வருகிறது. இதனுடைய விலை ரூ. 1999 மட்டுமே. எனவே இந்த மலிவு விலை எம்விஎல் ஆர்6 மொபைலை அனைவரும் விரும்பி வாங்குவர் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X