Home
Mobile

மைக்ரோமேக்ஸ் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு

By Super
மைக்ரோமேக்ஸ் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு
மார்க்கெட்டில் தனக்கென பிரத்யேக இடத்தை மைக்ரோமேக்ஸ் ஏற்படுத்தி கொண்டுவிட்டது. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலை மற்றும் வசதிகளை கொண்ட 30 வகையான போன்களை அந்த நிறுவனம் மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

இதில், பட்ஜெட் விலையில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் க்யூ-80 மற்றும் ஏ-70 ஸ்மார்ட்போன்களின சிற்ப்பம்சங்களின் ஒப்பீட்டை காணலாம்.

இதில், க்யூ-80 ஜாவா சாப்ட்வேரை அடிப்படையாக கொண்டது. அதேவேளை, ஏ-70 ஆன்ட்ராய்டு ப்ரேயா ஓஎஸ் கொண்டதாக இருக்கிறது. இதனால், ஏ-70 போனின் அப்ளிகேஷன்களை இயக்குவதற்கு வெகு எளிதாக இருக்கிறது.

இரண்டு போன்களும் வடிவமைப்பில் அழகாக இருக்கிறது. இருப்பினும், ஏ-70 முழுவதும் டச் ஸ்கிரீன் வசதிகொண்டதாக இருக்கிறது. க்யூ-80 போன் கிவெர்ட்டி+ டச் ஸ்கிரீன் வசதிகொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களில் குறைவில்லாமல் அனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் உள்ளன.

ஏ-70 போனில் 5 மெகாபிக்செல் கேமராவும், க்யூ-80 போனில் 3 மெகாபிக்செல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டிலும் வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா வசதியும் உள்ளது.

இரண்டு போன் மாடல்களிலும் கனெக்ட்டிவிட்டி வசதிகள் போதுமான அளவில் இருக்கின்றன. 3ஜி தொழில்நுட்பம் மூலம் அதிவேக இன்டர்நெட் வசதியையும் பெற முடியும். ஏ-70 போனில் வை-பை வசதி இருக்கிறது. ஆனால், க்யூ-80 போனில் இந்த வசதி இல்லை.

வசதிகளை வைத்து பார்க்கையில் மைக்ரோமேக்ஸ் ஏ-70 சிறந்ததாக தோன்றுகிறது. இருப்பினும், தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக அமையும் விலை ஒப்பீட்டில் க்யூ-80 கைக்கு எட்டும் விலையில் இருக்கிறது. க்யூ-80 ரூ.4,900 விலையிலும், ஏ-70 போன் ரூ.9,000 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X