எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ vs எச்டிசி தண்டர்போல்ட்: ஓர் ஒப்பீடு

எச்டிசி தன்டர்போல்ட் மொபைல் 4ஜி-எல்டிஇ அதிவேக திறன் கொண்ட மொபைலாகும். அதே போல் எல்ஜி ஆப்டிமஸ் மொபைலும் ஃப்ரீ 3டி க்ளாஸ் சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களிலுமே ஆக்சிலரோமீட்டர் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் வசதிகள் கொண்டது.
எச்டிசி தன்டர்போல்ட் மொபைலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்8666 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. எல்ஜி ஆப்படிமஸ் மொபைலில் டியூவல் கோர் ஓஎம்ஏபி4 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3டி கொண்ட எல்ஜி ஆப்டிமஸ் போனில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது.
எச்டிசி தன்டர்போல்ட் மொபைலில் டியூவல் லெட் ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு டிஜிட்டல் சூம் வசதியும் உள்ளது. இதில் லெட் பிளாஷ் எச்டிசி தன்டர்போல்ட் போனில் 768 எம்பி ரேம் வசதியுள்ளது. எல்ஜி ஆப்டிமஸ் மொபைலில் 512 எம்பி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
8ஜிபி மெமரியும், 32 ஜிபி மைக்ரோஎஸ்டிகார்டு வசதியும் இந்த மொபைகளில் கொடுக்கப்படுள்ளது. இதன் மூலம் வேண்டிய தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த இரண்டு போனிலுமே கணினியில் உள்ள தகவல்களைப் போனுக்கு பரிமாற்றம் செய்ய யூஎஸ்பி 2.0 சவுகர்யமும் உள்ளது.
நெட்வொர்க் சேவையை எச்டிசி தன்டர்போல்ட் மொபைலில் எளிதாகப் பெற முடியும். எல்ஜி ஆப்டிமஸ் மொபைலில் சோஷியல் நெட்வொர்க் வசதியுடன் 3டி வசதியையும் பெற முடியும். எச்டிசி தன்டர்போல்ட் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எல்ஜி ஆப்டிமஸ் ஸ்மார்ட மொபைலின் விலை ரூ.37,000.


Click it and Unblock the Notifications