Home
Mobile

புதிய மொபைல்போன்: ப்ளை மொபைல்ஸ் அறிமுகம்

By Super
புதிய மொபைல்போன்: ப்ளை மொபைல்ஸ் அறிமுகம்
காஸ்ட்லியான மொபைல்போன் வைத்திருந்தாலும், அதை பத்திரமாக வைத்துக்கொள்ள பலர் படாதபாடுபடுகின்றனர். பஸ்சில் ஏறும்போதோ அல்லது பாத்ரூம் செல்லும்போது ஆட்டையை போட்டுவிடுகின்றனர். இதுபோன்ற 420களிடமிருந்து தப்பிக்க டிஎஸ்-120 பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது ப்ளை மொபைல்ஸ்.

மேலும், 420களின் தொல்லையிலிருந்து அவசரமாக தப்பிக்க ஒரு சிம் கார்டு நான் ரொம்ப பிஸி என்று கூறினாலும், பதட்டப்படவேண்டியதில்லை. டியூவல் சிம் வசதிகொண்டதால் மற்றொரு நெட்வொர்க்கில் மூலம் பேசி அவசர உதவியை பெற முடியும்.

அதெல்லாம் சரி. மொபைலை அடுத்தவர் பார்த்தால் கவுரவம் போய்விடுமே என்று நினைக்கும் வாடிக்கையாளரின் எண்ணத்தை சரியாக புரிந்துகொண்டு 2.4 இஞ்ச் டிஎப்டி திரையுடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது ப்ளை டிஎஸ்-120.

இது 30 கேபி இன்பில்ட் சேமிப்பு திறனை கொண்டுள்ளது என்று கடைக்காரர் கூறியதும் கையால் தூர ஒதுக்கித் தள்ளவேண்டாம். வாங்கிவுடன் ஒரு கூடுதல் சேமிப்பு திறனை வாங்கி சொருகிக்கொண்டால் போதும். இஷ்டம்போல் 16ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டக்கொள்ள முடியும். அடுத்தது, கேமரா. இது குறைந்த ஆற்றல் கொண்ட விஜிஏ கேமராவை கொண்டுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் ஜும் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதிகளை தருகிறது.

எம்பி-3, டபிள்யூ ஏஎம்ஆர் மற்றும் எம்ஐடிஐ பார்மெட்டுகளில் உள்ள டப்பாங்குத்து பாடல்களை இதன் சக்திவாய்ந்த ஸ்பீக்கரில் கேட்கும்போது தன்னாலே கால்கள் ஆட்டம் போடுகிறது.

வி-2.0 புளூடூத் வெர்ஷன் கொண்ட இந்த போனில் ஜிபிஆர்எஸ், வேப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற வசதிகளை பெற முடிகிறது. எல்லாத்தையும்விட ஆஹா பேட்டரிக்கு சார்ஜ் போட மறந்துட்டா எப்படி 420 களிடமிருந்து தப்பிப்பது என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

இதன் கட்டுமஸ்தான பேட்டரி 300 மணிநேர ஸ்டான்ட்-பை மோடில் இருக்கும் ஆற்றல் கொண்டது. முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டாலும், விரைவில் விற்பனைக்கு வரும் இந்த புதிய மொபைல்போன் ரூ.2,404 விலையில் வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X