Home
Mobile

வரும் அக்டோபரில் புதிய வெர்ஷன் ஆன்ட்ராய்டு- சிறப்பு தகவல்கள்

By Super
வரும் அக்டோபரில் புதிய வெர்ஷன் ஆன்ட்ராய்டு- சிறப்பு தகவல்கள்
முகத்தை பார்த்து அடையாளம் காணும் டிஸ்பிளே, 3டி தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட யூஸர் இன்டர்பேஸ் என புத்தம் புது தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் ஐஸ்கிரீம் சான்ட்விச் என்ற புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷன் கொண்ட போனை வரும் அக்டோபரில் அறிமுமகாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்-5 உயர்ரக ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் களமிறக்கும் நிலையில், கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் இந்த புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷனுடன் கூடிய போன் முன்கூட்டியே அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும், ஜிஞ்சர்பிரீடு மற்றும் ஹனிகோம்ப் ஆகிய இரண்டு ஆன்ட்ராய்டு வெர்ஷன்களிலும் உள்ள முக்கிய அம்சங்களின் கலவையும் இதில் இருக்கும். மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆன்ட்ராய்டு வெர்ஷன் ஓஎஸ் தகவல்களை ஹார்டு டிஸ்கில் சேமிக்கும்போது சிறப்பான தகவல் சேமிப்பு மேலாண்மையை கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால், ஹார்டு டிஸ்கில் தேவையில்லாமல் இடம் விரயமாவதோடு, தகவல்களை தேடும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது.

ப்ராக்மென்டேஷன் என்று கூறப்படும் இந்த முக்கிய பிரச்னை புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது இலவசமாக டவுண்லோடு செய்துகொள்ளலாம் என்பதோடு மட்டுமல்லாமல் பழைய ஆன்ட்ராய்டு போன்களில் அப்டேட்டும் செய்து கொள்ள முடியும்.

இதனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய ஆன்ட்ராட்டு வெர்ஷன் பற்றிய தகவல்கள் கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிக விலை கொடுத்து வாங்கும் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 3டி இல்லாத குறையை போக்கும் வகையில் 3டி தொழில்நுட்பம் அப்டேட்டுடன் வருகிறது.

மேலும், வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்டுகளை இணைக்கும் புளூடூத்தை சப்போர்ட் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X