சியோமி கருவிகளின் பேட்டரி ஆயுளை நீட்டிக்க 13 டிப்ஸ்.!

By Prakash
|

நமது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகள் உள்ளன, பெரும்பாலும் மொபைல்போன்களை நம்பித்ததான் தற்போது நம் வாழ்க்கை இயங்குகிறது. மேலும் மொபைல் போன் சார்ஜ் போட 1 மணி நேரம் தேவையென்றால் அந்த ஒரு மணி நேரம் கூட முழுவதுமாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை காரணம் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை அப்படி, மிக முக்கியமான நிகழ்வு அல்லது பயனம் போன்றவற்றில் மொபைல்போனில் இருக்கும் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் அதன் மீது மிகப் பெரிய வெறுப்பு வருகிறது, சில சமயம் அந்த மொபைல் போனை உடைக்கவும் நேரிடும். பொதுவாக சியோமி மொபைல்போனில் உள்ள பேட்டரிகள் பொருத்தமாட்டில் இன்டர்நெட், அதிக கால் அழைப்பு உரையாடல்கள் போன்றவற்றால் அந்த மொபைல் மிகவும் சூடாகும், சில சமயம் அந்த மொபைல்போன் பயன்படுத்த முடியாமல் போகிறது. இதை தவிர்க்க பேட்டரி ஆயுளை நீட்டிக்க என்ன வழி என்பதை பார்ப்போம்

தற்போது வரும் சியோமி ஸ்மார்ட்போன்களpல் அதிக நேரம் பேட்டரி ஆயுளை நீட்டிக்க பல வழிகள் உள்ளது. மேலும் இன்டர்நெட் மற்றும் விளையாட்டு போன்றவை அதிகம் பயன்படுத்துவதால் மிக எளிமையில் பேட்டரி தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.

ஆப்:

ஆப்:

சியோமி மொபைல் பொருத்தமாட்டில் தேவையில்லாத ஆப் போன்றவற்றை உடனே நீக்க வேண்டும், நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஆப் மட்டுமே இருந்தால் நல்லது.

ஜிபிஎஸ்:

ஜிபிஎஸ்:

அதிக நேரம் ஜிபிஎஸ் உபயோகித்தால் மிக எளிமையில் பேட்டரி தீர்ந்துவிடும் ஜி.பி.எஸ்ஸைப் பயன்படுத்தி இருப்பிட அனுமதியை பெறமுடியும். இதை அதிக நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எம்ஐயுஐ8:

எம்ஐயுஐ8:

எம்ஐயுஐ8 என்பது ஒரு ஆப், இவற்றைப் பயன்படுத்தி அதிக நேரம் வரை மொபைல் போன் இயக்கலாம், குறிப்பிட்ட பாதுகாப்பு தன்மை கொண்டவையாக உள்ளது.

அட்ஜெட்ஸ் ஸ்கிரீன் ப்ரைட்நஸ்:

அட்ஜெட்ஸ் ஸ்கிரீன் ப்ரைட்நஸ்:

உங்கள் மொபைல்போனில் அதிக பேட்டரி அளவு குறைவதற்க்கு ஒரு முக்கிய காரணம், ஸ்கிரீன் ப்ரைட்நஸ் தான், இவற்றை எப்போது ப்ரைட்நஸ் அளவை குறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வைபரேசன்:

வைபரேசன்:

இவை பெரும்பாலும் தொலைபேசி அழைப்பில் ஒவ்வொரு முறையும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது, எனவே இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வைஃபை:

வைஃபை:

தேவையானபோது மட்டும் வைஃபை உபயோகித்தால் நல்லது மற்ற நேரங்களில் அது இயக்கத்தில் இருந்தால், மிக விரைவில் பேட்டரி அளவு குறைந்துவிடும்.

சிங்க் :

சிங்க் :

இது மின்னஞ்சல் போன்ற பயன்பாடுகள் போன்றவற்றில் மிகவும்முக்கியம் இஆனால் தேவை இல்லை போது பயன்படுத்தக்கூடாது.

அதீத வைபரேசன்:

அதீத வைபரேசன்:

உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் ஆப், மற்றும் கால் அழைப்பு போன்ற அனைத்து அதீத வைபரேசன் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

ஆட்டோ அப்டேட்:

ஆட்டோ அப்டேட்:

உங்கள் இன்டர்நெட் பயன்படுத்தும்போது ஆப் போன்றவற்றை அடிக்கடி அப்டேட் செய்யமால் தவிர்ப்பது நல்லது. இவை பேட்டரிக்கு மிகவும் நல்லது.

ஸ்கிரீன் சாட்:

ஸ்கிரீன் சாட்:

பொதுவாக சியோமி ஸ்மார்ட்போன்களpல் ஸ்கிரீன் சாட்எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது, இது பேட்டரி ஆயுளை மிக விரைவில் குறைத்துவிடும்.

 வால்பேப்பர்:

வால்பேப்பர்:

எப்போதும் நிலையான வால்பேப்பர் பயன்படுத்தவும், 3டி போன்ற வால்பேப்பர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஏர்பிளேன் மோட்:

ஏர்பிளேன் மோட்:

குறைவான சிக்னல் உள்ளபகுதிகளில் உங்கள் மொபைல் போனில் ஏர்பிளேன் மோட் பயன்படுத்தவும்.

 போன் அப்டேட்:

போன் அப்டேட்:

அடிக்கடி உங்கள் போன் அப்டேட் செய்வது மிகவும் நல்லது, இவை பேட்டரி ஆயுளை நீட்டிக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
13 Tips To Boost Xiaomi Smartphone Battery Life; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X