Home
Mobile

புதிய டூவல் சிம் மொபைல்கள் - மோட்டோரோலா அறிவிப்பு

By Super
புதிய டூவல் சிம் மொபைல்கள் - மோட்டோரோலா அறிவிப்பு
எக்ஸ்-212, எக்ஸ்-119 மற்றும் எக்ஸ்-109 ஆகிய மூன்று எக்ஸ் சீரிஸ் டூவல் சிம் மொபைல்களை இந்திய சந்தையில் தற்போது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த மொபைல்கள் விலையிலும் தரத்திலும் வசதிகளிலும் அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கின்றன. இவற்றின் விலை ரூ. 3500லிருந்து ரூ. 6190 வரையாகும்.

எக்ஸ்-212 மோட்டோரோலாவின் ஆர்எஸட்ஆர் போன்று தோன்றுகிறது. இதனுடய விலை ரூ. 5190 ஆகும். இது எப்எம் ரேடியோ ரிக்கார்டிங், 2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2.4 இன்ச் அளவுள்ள டிஎஃப்டி டிஸ்பிளே ஆகிய சிறப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் 16ஜிபி மெமரியை சேமிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டையும் கொண்டு இவ்வளவு மலிவு விலைக்கு வருவது எவருமே எதிர்பார்க்காத ஒன்றாகும்.

அதே நேரத்தில் எக்ஸ்-119 கிவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது. மேலும் இது 2.4 இன்ச் அளவு கொண்ட விஜிஎ டிஸ்பிளே மற்றும் க்யுவிஜிஎ தொடுதிரை வசதியை கொண்டுள்ளது. வைபை வசதியுடன் 3 மெகா பிக்ஸல் கேமராவும் உண்டு. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இதன் சேமிப்பு திறனை 32ஜிபி வரை கூட்ட முடியும். இதன் விலை ரூ.6,190 மட்டுமே.

எக்ஸ்-109 மொபைலும் கிவெர்ட்டி கீபேடை பெற்றிருக்கிறது. இதனுடைய விலை ரூ.3,590 ஆகும். இது 2 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டிருக்கிறது. துல்லியமான ஒலியுடன் கூடிய எப்எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் 2.1 தொடர்பு மற்றும் 750எம்எஹச் பேட்டரி ஆகியவை இதனுடைய முக்கிய சிறப்புகளாகும். மேலும் 32ஜிபி வரை விரிவு படுத்தக்கூடிய இதன் சேமிப்பு வசதி இதனுடய தனித்துவமாகும்.

உண்மையாக இந்த மூன்று மொபைல்களும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைச் சேரவேண்டும் என்பதற்காக மோட்டோரோலா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X