Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி.. எந்த போன்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் ஓஐஎஸ் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட விவோ வி29 போனானது பட்ஜெட்டில் கிடைக்கிறது.

விவோ வி29 அம்சங்கள் (Vivo V29 Specifications): இந்த போனின் டிஸ்பிளேவானது, 3டி கர்வ்ட் டிசைன் (3D Curved Design) கொண்டிருக்கிறது. 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கொண்டுள்ளது. அதோடு 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் வருகிறது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 778G 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த விவோ வி29 போனில் போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, ஓஐஎஸ் (OIS) மற்றும் சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் (Ultra Wide Angle Sensor) + 2 எ்ம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ஆரா லைட் (Aura Light) இடம் பெற்றுள்ளது.

பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. 4600mAh பேட்டரி!

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த விவோ வி29 போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) கொண்டிருக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.46 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. 188 கிராம் எடை வருகிறது.

இந்த விவோ வி29 போனானது, 5ஜி வேரியண்ட் என்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்களும் கொண்டுள்ளது.

இந்த போனில் ஹிமாலயன் ப்ளூ, மெஜஸ்டிக் ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,890ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட்டில் ரூ.1,645 தள்ளுபடியோடு விற்பனையாகிறது. இந்த தள்ளுபடியை பிளிப்கார் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Vivo V29 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X