Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3 5ஜி (vivo T3 5G) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ டி3 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19249 விலையில் வாங்க முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்

விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. அதேபோல் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset) வசதி இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த விவோ டி3 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant)கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்

குறிப்பாக விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் எல்டி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேசமயம் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot )ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.கிரிஸ்டல் ஃப்ளேக் (Crystal Flake) மற்றும் காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue) நிறங்களில் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
13 Percent Discount on vivo T3 5G With 6GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X