மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.16999 போதும்.. 108MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 70W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) 108எம்பி கேமரா, டைமன்சிட்டி 6080 சிப்செட், 6000mAh பேட்டரி, 70W சார்ஜிங் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட டெக்னோ போவா 6 ப்ரோ (TECNO POVA 6 Pro) போனுக்கு கிடைக்காத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 6 ப்ரோ அம்சங்கள் (TECNO POVA 6 Pro Specifications): இந்த போவா போனில் டைனாமிக் லைட் எஃபெக்ட் (Dynamic Light Effect) பேக் பேனல் வருகிறது. ப்ரொபெல்லர்-ஷேப்ட் லைட் (Propeller-shaped Light) கொண்டிருக்கிறது. கால், சார்ஜிங், கேமிங் எஃபெக்ட் இன்டிகேஷன் வருகிறது.

இந்த போவா மாடலில் 6.78 இன்ச் (2436 ×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான பிளாட் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
அதோடு டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 14 (HiOS 14) வருகிறது. இந்த போவா மாடலில் மீடியம் கேமிங் பிரியர்களுக்கான மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதேபோல ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபி (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. இந்த போவா போனில் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 70W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது. 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 50 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
எஸ்டிஎஸ் செக்யூர் பேட்டரி டெக்னாலஜி (STS Secure Battery Technology) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜ் (Bypass Charge) மற்றும் சார்ஜிங் வாட்டர் டிடெக்சன் (Charging Water Detection) சப்போர்ட் உள்ளது. 108 எம்பி ரியர் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா வருகிறது. ஏஐ கேமரா (AI camera) சப்போர்ட் உள்ளது.
பட்ஜெட்லும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி உள்ளது.
காமெட் கிரீன் (Comet Green), மெட்ராய்டு கிரே (Meteorite Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போவா போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21.999ஆகவும் இருக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் ஜே&கே பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








