Home
Mobile

பிளிப்கார்ட் அதிரும்.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 5500mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.23,999 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரும்..  ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 Pro 5G specifications): 6.67-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

Take a Poll

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (Octa Core MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் உடன் ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600)பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது.

அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேற சிறப்பான அம்சங்கள் இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் சியோமி ஹைப்பர் எஸ் (Xiaomi Hyper OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஒஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளன. பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Redmi Note 14 Pro 5G with 8GB Ram in Flipkart Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X