Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.22749 போதும்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜ்.. 5100mAh பேட்டரி.. எந்த போன்?

இந்திய கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக சாம்சங் சென்சாருடன் 200 எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5100mAh பேட்டரி, 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுத்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) போனின் புதிய எடிஷன் இப்போது நம்ப முடியாத தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனின் முழு பீச்சர்கள் எப்படி? டிஸ்கவுண்ட் எப்படி? விவரம் இதோ.

இந்த ரெட்மி மாடலில் ஏற்கனவே மிட்நைட் பிளாக் (Midnight Black), ஆக்டிக் ஒயிட் (Arctic White) மற்றும் கோரல் பர்பிள் (Coral Purple) ஆகிய மூன்று கலர் வேரியண்ட்கள் ஆர்டருக்கு வந்துவிட்டன. இந்த மாடல்களே விற்பனையில் பட்டையை கிளப்பியதால், ஸ்கார்லெட் ரெட் (Scarlet Red) என்னும் புதிய கலர் வேரியண்ட் களமிறங்கியது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.22749 போதும்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே!

இந்த புதிய மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, ரூ.4250 மதிப்பிலான உடனடி டிஸ்கவுண்ட் உடன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த ரெட்மியில் 200 எம்பி மெயின் கேமரா கேமரா வருகிறது. இந்த கேமராவில் அல்ட்ரா-ஹை ரெஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) சப்போர்ட் உள்ளது. அதேபோல 4X இன்-சென்சார் ஜூமிங் வருகிறது.

சாம்சங் ஐசோசெல் எச்பி3 (Samsung ISOCELL HP3) கொண்டிருக்கிறது. இதுவொரு ஆட்டோபோகஸ் மாடலாகும். மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 16 எம்பி ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ பியூட்டி மோட், நைட் மோட் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

விஸ்வரூப விற்பனை.. ரூ.22749 போதும்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே!

6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1800 பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்டிருக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது.

மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் கொண்ட ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் 67W டர்போ சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், டூயல் நானோ சிம் சிலாட், டால்பி அட்மோஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது.

இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலை அமேசான் தளத்தில் ஈஎம்ஐ மூலம் வங்கினால், ரூ.4250 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, ரூ.22749 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம். இதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ஈஎம்ஐ அல்லாமல் ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Redmi Note 13 Pro With Scarlet Red in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X