அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.21,999 பட்ஜெட்ல 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார் விற்பனையில் (Flipkart Sale) 200எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 67W சார்ஜிங், 5100mAh பேட்டரி மற்றும் 16ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) 5ஜி போனானது இதுவரையில் கிடைக்காத விலைக்கு வந்துள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த ரெட்மியில் 200 எம்பி அல்ட்ரா-ஹை ரெஸ் (Ultra-High Res) மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சாம்சங் ஐசோசெல் எச்பி3 (Samsung ISOCELL HP3) சென்சார் மற்றும் ஓஐஎஸ் + ஈஐஎஸ் டெக்னாலஜி வருகிறது.

சூப்பர்கியூபிடி ஆட்டோபோஸ் (SuperQPD Autofocus) சப்போர்ட் வருகிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. 2X இன்-சென்சார் ஜூம் மற்றும் 4X லாஸ்லெஸ் ஜூம் சப்போர்ட் உள்ளது.
மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), வீடியோ மேக்ரோ மோட் (Video Macro Mode) மற்றும் ஷார்ட் ஃபிலிம் டெப்லேட்கள் (Short Film Templates) போன்ற வீடியோகிராபி பீச்சர்கள் வருகின்றன. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ பியூட்டி (AI Beautify) போன்ற போட்டோ பீச்சர்கள் உள்ளன.
அதேபோல ஏஐ பியூட்டி மோட், போர்ட்ராய்டு மோட், நைட் மோட் போன்ற பீச்சர்கள் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, பிரீமியம் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி அவுட்புட் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் எதிர்பார்க்கலாம்.
இந்த பீச்சர்களை போலவே டிஸ்பிளே பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், டால்பி விஷன் (Dolby Vision), டிசிஐ-பி3 கலர் காமட் (Color Gamut), 68 பில்லியன் கலர் டெப்த் (Color Depth) மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுபோக 1920Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது. இதுவொரு ஆக்டா கோர் (Octa Core) சிப்செட் மாடலாகும். மிட்-ரேஞ்ச் கேமிங் அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ ஜிபியு ஏ710 (Adreno GPU A710) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. 67W டர்போ சார்ஜ் (Turbo Charge) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
மேலும், ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் ஓவர்லோட் புரொடெக்சன் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. இந்த ரெட்மியில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display FingerPrint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) சப்போர்ட் மற்றும் IP54 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
10 5ஜி பேண்ட் சப்போர்ட், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், டூயஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது. கோரல் பர்பிள் (Coral Purple), ஆர்டிக் ஒயிட் (Arctic White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








