Home
Mobile

SALE பிச்சிக்குது! ரூ.3000 ரேட் கட்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, IP69 ரேட்டிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் கமிறங்கிய ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரூ.3,000 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இந்த மாடலுடன் ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) போனின் விற்பனையும் டிஸ்கவுண்ட் போக தொடங்கி இருக்கிறது. இந்த ஜிடி 7 மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

ரியல்மி ஜிடி 7டி அமேசான் விற்பனை (Realme GT 7T Amazon Sale): இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.3,000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது! ரூ.3000 ரேட் கட்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்!

ஆகவே, ரூ.31,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற மல்டிபிள் பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும்போது, எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கும் மட்டும் ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக ரூ.33,249 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7 அமேசான் விற்பனை (Realme GT 7 Amazon Sale): இந்த ரியல்மி ஜிடி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.42,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களுக்கும் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.36,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். மேற்கண்ட மாடல்களுக்கும் 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. அதேபோல ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black) மற்றும் ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) கலர்கள் பொதுவாக கிடைக்கிறது. ஆஸ்டன் மார்டின் கிரீன் (Aston Martin Green) ஜிடி 7 மாடலிலும், ரேசிங் எல்லோ (Racing Yellow) ஜிடி 7டி மாடலிலும் கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது! ரூ.3000 ரேட் கட்ல 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்!

ரியல்மி ஜிடி 7டி அம்சங்கள் (Realme GT 7T Specifications): 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 மேக்ஸ் 4என் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி + 8 எம்பி அல்ட்ரா வைடு + 32 எம்பி செல்பீ வருகிறது.

ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): இந்த போனிலும் 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி, IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி + 8 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Realme GT 7T With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X