முரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.18,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. 16GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 108 எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் சார்ஜ், 16ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போனுக்கு மிரளவைக்கும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 11 அம்சங்கள் (Realme 11 Specifications): இந்த போன் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த ரியல்மி போனில் பக்காவான டூயல் ரியர் கேமரா வருகிறது. ஆகவே, ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றிருக்கிறது. இந்த கேமராவில் 3X ஜூமிங் சப்போர்ட் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், நானோபிக்சல் பிளஸ் டெக்னாலஜி (Nonapixel Plus Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜி ஜூமிங் மற்றும் லோவ் லைட்டிங் போது, பிக்சல் உடையாத போட்டோக்களை கொடுக்கக்கூடியது. இதில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), சினிமாடிக் மோட் (Cinematic Mode), ஹைபர்ஷாட் இமேஜிங் (HyperShot Imaging) போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த ரியல்மி மாடலில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ரியல்மி யுஐ 4.0 (realme UI 4.0) ஓஎஸ் மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. அதேபோல 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (3.5mm Earphone Jack), டிடிஎஸ் (DTS) கொண்டிருக்கிறது. இந்த போனில் கேமராவுக்கு அடுத்தப்படியாக பக்காவான பேட்டரி சிஸ்டம் வருகிறது.
ஆகவே, 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி ஒரு ஃபுல் சார்ஜிக்கு 18.7 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் 9.9 மணி நேர கேமிங் பிளேபேக் கொடுக்கக்கூடியது. இந்த ரியல்மி போனில் குளோரி பிளாக் (Glory Black) மற்றும் குளோரி கோல்டு (Glory Gold) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை, ரூ.18,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பக்காவான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 128 ஜிபி மாடலுக்கு ரூ.950 தள்ளுபடியும், 256 ஜிபி மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி போக ரூ.18,049 பட்ஜெட்டில் 128 ஜிபி மெமரி மாடலை வாங்கிக்கொள்ளலாம். பட்ஜெட் விலையில் 108 எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் சார்ஜ், 2 டிபி மெமரி சப்போர்ட் கொண்ட போன் வேண்டும் என்றால், இது நல்ல தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








