குடியரசு தின SALE பிச்சிக்குது.. ரூ.16,999 க்கு 3D டிஸ்பிளே.. 5520mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Flipkart Great Republic Day Sale 2026) சிறப்பு விற்பனையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 5520mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவுடன் இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது 13 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.18,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 விலைக்கு இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) உள்ளது. இதில் கூகுள் ஜெமினி இன்டிகிரேஷன் செய்யப்பட்டு உள்ளது. முழு பீச்சர்கள் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கின்றன.
போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது.
கேம் டர்போ மோடில் (Game Turbo Mode) 2560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) கிடைத்துள்ளது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.
கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட்டை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போந் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. மெயின் கேமராவுக்கு லைட் ப்யூஷன் 400 (Light Fusion 400) சென்சார் உள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 20 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ-என்ஹான்ஸ்டு போர்ட்ராய்டு கிளாரிட்டி (AI-enhanced Portrait Clarity), டைனாமிக் ஷாட் (Dynamic Shots 2.0), ஏஐ இமேஜ் எடிட்டிங் (AI Image Editing) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ எரைஸ் (AI Erase) போன்ற வழக்கமான பீச்சர் உள்ளது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுத்தும், 5520mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. 7.35 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








