ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,249 போதுங்க.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 256GB மெமரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களுடன் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் ஐடெல் எஸ்23 பிளஸ் (Itel S23 Plus) போனுக்கு டைனாமிக் பார் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டைனாமிக் பார் மூலம் பேஸ் அன்லாக், பேக்-கிரவுண்ட் கால், சார்ஜிங் அனிமேஷன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதோடு ஏஆர் மெஷர் பீச்சர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேமராவின் போட்டோ மற்றும் வீடியோ குவாலிட்டி பட்டையை கிளப்புகிறது. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் ஆஃபர் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

ஐடெல் எஸ்23 பிளஸ் அம்சங்கள் (Itel S23 Plus Specifications): இந்த ஐடெல் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12 என்எம் (Octa-Core UNISOC T616 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி 57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஐடெல் ஓஎஸ் 13 சப்போர்ட் வருகிறது.
இந்த போனானது, 8 ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் கொண்டிருக்கிறது. அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 256 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் மாடலில் 6.78 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிபி-பி3 கலர் காமட் வருகிறது.

அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த ஐடெல் போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.
அந்த வகையில், எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ செகண்டரி கேமரா வருகிறது. அதோடு 32 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் எச்டிஆர், டைம் லேப்ஸ் மற்றும் அல்ட்ரா ஸ்டெடி போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In Display Fingerprint Scanner) வருகிறது.
அதோடு பேஸ் அன்லாக், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஜி சென்சார் வருகிறது. இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802, ப்ளூடூத் 5.1, என்ஃஎப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை வருகின்றன. இந்த ஐடெல் போன் எலிமெண்ட்டல் ப்ளூ, லேக் சியான் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.13,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் அசத்தலான தள்ளுபடியுடன் கம்மியான விலைக்கு கிடைக்கிறது. இந்த போனை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ரூ.13,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த ஐடெல் எஸ்23 பிளஸ் போனை வெறும் ரூ.13,249க்கு வாங்கி கொள்ள முடியும். இந்தியாவில் கர்வ்ட் டிஸ்பிளே போன்களில் இந்த மாடல் மட்டுமே மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. அதோடு ரேம், பேட்டரி போன்ற அம்சங்களிலும் பின்னியெடுக்கிறது.


Click it and Unblock the Notifications