தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.19,999 பட்ஜெட்ல 7300mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 7300mAh பேட்டரி மட்டுமல்லாமல், 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை ஐக்யூ இசட்10 5ஜி (iQOO Z10 5G) போன் கொடுத்தது. இப்போது, ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஐக்யூ இசட்10 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஐக்யூ இசட்10 5ஜி அம்சங்கள் (iQOO Z10 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 90W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7300mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி வருவதால் ப்ளூவோல்ட் டெக்னாலஜி (BlueVolt Technology) மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. 33 நிமிடங்ளில் 1-50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இது குறைவாக தோன்றலாம்.

ஆனால், இவ்வளவு பெரிய பேட்டரிக்கு அதிக வேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு இதுவரையில் கிடைக்காத பேக்கப் எதிர்பார்க்கலாம். இந்த ஐக்யூ இசட்10 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேக் செய்யப்பட்டுள்ளது.
12 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
இந்த ஐக்யூ இசட்10 5ஜி போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது.

2 எம்பி பொக்கெ கேமரா, 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. லைவ் போட்டோ (Live Photo), சூப்பர் நைட் போர்ட்ராய்டு (Super Night Portrait) போன்ற பீச்சர்கள் இருக்கின்றன. இந்த ஐக்யூ இசட்10 5ஜி போனில் ஷீல்டு கிளாஸ் புரொடெக்சன் மற்றும் ட்ராப் ரெசிஸ்டன்ட் ஃபில்ம் ஆகியவற்றுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.
மேலும், வெட் ஹேண்ட் டச் மற்றும் கிரீஸி ஹேண்ட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி சார்ஜிங் + ஆடியோ சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ஐக்யூ போனில் பிரீமியம் லுக் கொடுக்கும் கிளாசியர் சில்வர் (Glacier Silver), ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) கலர்கள் கிடைக்கின்றன.
ஐக்யூ இசட்10 5ஜி அமேசான் விற்பனை (iQOO Z10 5G Amazon Sale): 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.21,999ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.23,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 25,999ஆக இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 விலைக்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications