Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்களிடையே விஸ்வரூப வரவேற்பு பெற்ற ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட் பட்ஜெட்டில் வெளியாகி மிரள விட்டுள்ளது. ரூ.2000 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைப்பதால் விற்பனை பட்டையை கிளப்புகிறது.

இந்த போன் டூயன் டோன் லெதர் டிசைனில் சோனி கேமராவுடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. ஆனால், ஹை-எண்ட் வேரியண்ட்கள் மட்டும் விற்பனைக்கு வந்ததால், 128 ஜிபி மெமரி மாடலுக்கான எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, விற்பனைக்கு கிடைக்கிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5160mAh பேட்டரி!

ஐக்யூ நியோ 9 ப்ரோ அம்சங்கள் (iQOO Neo 9 Pro Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.

மிட்-ரேஞ்ச் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. நைட் வீடியோ மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரை வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் ஐஎம்எக்ஸ்920 (IMX920) சென்சார் வருகிறது. அதுமட்டுமல்லாமல், விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) சிப் மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொடுக்கப்படுள்ளது. ஆகவே, பிரீமியம் கேமரா பீல் எதிர்பார்க்கலாம். 16 எம்பி செல்பீ கேமராவானது, 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உடன் வருகிறது.

பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5160mAh பேட்டரி!

1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 பிக்சல்கள்) பிளாட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 3000 நிட்ஸ் பிரைட்னஸ்,2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி போன்ற ஹை-லெவல் கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்கள் வருகின்றன.

இந்த ஐக்யூவில் 120W அல்ட்ரா-பாஸ்ட் ஃபிளாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் மற்றும் ஆடியோ ஜாக் கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.

இந்த ஐக்யூவில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. லெதர் பேனல் டிசைன் மற்றும் டூயல் டோன் கொண்ட ப்ரீ ரெட் (Fiery Red) விற்பனைக்கு வருகிறது. அதேபோல கான்கியூரர் பிளாக் (Conqueror Black) கலரும் கிடைக்கிறது.

ஐக்யூ நியோ 9 ப்ரோ விலை (iQOO Neo 9 Pro Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.34,999ஆக நிர்ணயம் இருக்கிறது. ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ரூ.4,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது.

ஆகவே, இந்த போனை ரூ.32,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்ற மாடல்களுக்கும் கிடைக்கிறது. ஆகவே, அவற்றின் விலையை பார்ப்போம். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.36,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 Percent Discount on iQOO Neo 9 Pro With 128GB Storage in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X