பிச்சிக்குது பிளிப்கார்ட்.. வெறும் ரூ.29,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. QUAD கேமரா.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் எட்ஜ்லெஸ் டிஸ்பிளே, 125W டர்போபவர் சார்ஜிங், குவாட் பிக்சல் கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4500mAh பேட்டரி போன்ற பீரிமியம் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) மாடலானது, டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த மோட்டோவில் குவாட் பிக்சல் டெக்னாஜி (Quad Pixel Technology) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் வருகிறது.

13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சாம்சங் சென்சாருடன் 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோ கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. மேலும், ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ விஷன் சப்போர்ட் உள்ளது.
இந்த கேமராவிலும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் வருகிறது. சாம்சங் சென்சார், குவாட் பிக்சல் டெக்னாலஜி மற்றும் ஆட்டோபோகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் மொபைல் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
இந்த மோட்டோவுக்கு 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படுகிறது. அட்ரினோ 720 ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. மேலும், 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டிருக்கிறது.

டிஸ்பிளே பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ட்ரூ கலர் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும். பிஓஎல்இடி (pOLED) பேனலில் எட்ஜ்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சனுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வருகிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்பாஷியல் சவுண்ட் (Spatial Sound) மற்றும் 3 மைக்ரோபோன்கள் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடலில் 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே,, ரூ.28,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications