நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்

Posted By: Staff

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்: மைக்ரோமேக்ஸ் அறிமுகம்
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய சூப்பர் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏ-85 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் போன் வடிவமைப்பிலும் அசத்துகிறது.

3.8 டிஎஃப்டி டச் ஸ்கிரீனுடன் மின்னுகிறது ஏ-85. 480 X 800 பிக்ஸல் ஸ்டேன்டர்டு டிஸ்ப்ளேயை ஏ-85 கொண்டுள்ளது. அதோடு 246 பிபிஐ பிக்ஸல் டென்சிட்டியை சப்போர்ட் செய்கிறது. சென்சார் ஆட்டோ டர்ன் ஆஃப் மற்றும் சென்சார் யூஐ ஆட்டோ ரொட்டேட் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

8 ஜிபி வரை ஸ்டோரேஜ், 512 எம்பி ரேம் வசதி உள்ளது. இதனை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். ஓஎஸ் கான்ஃபிகிரேஷன் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சூப்பர் போன் நிஜமாகவே சூப்பர் தான்.இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் செக்யூர்டு செய்யப்பட்டுள்ளது.

தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டுமா இதோ இருக்கவே இருக்கிறது புளூடூத் வசதி.வேகமான தகவல் பரிமாற்ற செயல்பாட்டிற்கு வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எட்ஜ் டெக்னாலஜி கொண்டு ஜிபிஆர்எஸ் சவுகரியமும் இதில் தரப்பட்டுள்ளது.

இதில் 1ஜிஹெசட் என்விஐடிஐஏ டெக்ரா 2 டியூல் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஓஎஸ் வர்ஷன் ஃப்ரையோ 2.2 வழங்கப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் வசதிக்காக720 பி ஹெச்டி,5எம்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அட்வான்ஸ்டு இமேஜ் ஆட்டோ ஃபோக்கஸ்,ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளையும் எந்த வித சிரமமும் இல்லாமல் பெறலாம். இந்த மைக்ரோமேக்ஸ் ஏ85 மாடல் ரூ.15,000 இருந்து ரூ.18,000 வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot