பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ், மிரளவிடும் டிசைன், கேமரா பிரியர்களுக்கான சோனி சென்சார், கேமிங் அவுட்புட் கொடுக்கும் டைமன்சிட்டி 7200 சிப்செட் போன்ற பீச்சர்களுடன் விவோ டி3 5ஜி (Vivo T3 5G) போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G Specifications): இந்த விவோவில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4எம்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் விவோவின் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்டிருக்கிறது. இந்த போனில் ஃபிளிக்கர் சென்சாருடன் (Flickr Sensor) டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) மற்றும் ஃபிளிக்கர் சென்சார் வருகிறது. இந்த மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), சூப்பர் மூன் (Super Moon) பீச்சர்கள் இருக்கின்றன.
1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவிலும், நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait) போன்ற கேமரா பிரியர்களுக்கான பீச்சர்கள் வருகின்றன. அதேபோல டிஸ்பிளே பீச்சர்களும் பக்காவாகவே இருக்கின்றன. 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிடி-ஸ்டார்2 கிளாஸ் புரொடெக்சன் (DT-Star2 Glass Protection) கொண்டிருக்கிறது.
வழக்கமாக கொடுக்கப்படும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) வருகிறது.
இந்த விவோ டி3 5ஜி போனில் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) கொண்டிருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட் போன்களில் கிடைக்கும் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash resistant) வருகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), 5ஜி, டூயல் 4ஜி, வை-பை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்லிம் டிசைனில் 7.83 தடிமன் மற்றும் 188 கிராம் எடை வருகிறது. காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue), கிரிஸ்டல் ஃபிளேக் (Cystal Flake) கலர்களில் கிடைக்கிறது.
இந்த விவோ டி3 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அறிமுக சலுகையில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தள்ளுபடியானது, பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ டெபிட், கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








